Face Upward - Widget

இந்த தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் கார்த்தி.| For this Diwali double treat for fans of Karthi.

Loading...

கார்த்தி- ராஜேஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ஆல் இன் ஆல் அழகு ராஜா இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து காஜல் அகர்வால், சந்தானம், பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் கலக்கல் ரொமாண்டிக் கொமடியுடன் உருவாகியிருக்கும் இப்படம் வருகிற தீபாவளி சரவெடியில் வெடிக்கவிருக்கிறது.

தற்போது இதனோடு ஸ்பெஷல் விருந்தாக கார்த்தியின் பிரியாணி படத்தின் டிரைலரையும் வெளியிடத்திட்டமிட்டுள்ளது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் பொங்கல் ஜல்லிக்கட்டில் களமிறங்கவுள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.