Face Upward - Widget

‘போயும் போயும் அந்த ஹீரோவுக்கா வெயிட் பண்றது?’ : விஷாலுக்கு ‘கொம்பு சீவிய’ டைரக்டர்| Do not Wait For Jai

Loading...
போயும் போயும் அந்தப் பையனுக்காகவா நாம நம்ம புராஜெக்ட்டை தள்ளிப்போடணும், பேசாம வேற ஒரு ஹீரோவுக்கு அட்வான்ஸ் குடுத்து ஷூட்டிங்குக்கு கெளம்பலாமே? என்று விஷாலுக்கு கொம்பு சீவி விட்டிருக்கிறார் ஒரு டைரக்டர்.

அவர் வேறு யாருமல்ல, அவரோட ஆஸ்த்தான டைரக்டர் தீராத விளையாட்டுப் பிள்ளை ‘திரு’ தான்.

தொடர் தோல்விகளால் நொந்து போயிருந்த ஜெய்க்கு ‘எங்கேயும் எப்போதும்’ படத்துக்குப் பிறகு மார்க்கெட் சூடு பிடிக்கத் தொடங்கியது. அடுத்து வந்த ‘ராஜாராணி’ படமும் அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு போக அதையடுத்து பல படங்களில் மளமளவென்று கமிட்டாகி விட்டார் ஜெய்.

கைவசம் ஃசைலண்ட்டாக அரை டஜன் படங்களை வைத்திருக்கும் அவர் ராப்பகலாக படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்தான், நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரியின் திருவை வைத்து ஒரு புதிய படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தார். ஜெய் நடிப்பதாக இருந்த இந்தப் படத்தில் முதலில் கால்ஷீட் தருவதாகச் சொன்ன ஜெய் பிறகு அடுத்த வருஷம் ஜூன் வரைக்கும் என்னோட கால்ஷீட் புல்லாயிடுச்சு என்று கை விரித்து விட்டாராம்.

இதனால் சரி ஜெய்யோட மார்க்கெட் இப்போ ஸ்டேடியாத்தானே இருக்கு. அதனால் ஒருவருஷம் வெயிட் பண்ணினா தான் என்ன தப்பி என்று நினைத்த விஷால் அவருக்காக வெயிட் பண்ண ஆரம்பித்தார்.

ஆனால் திருவோ “பாஸு… அவருக்காக ஒரு வருஷம் வெயிட் பண்றது வேஸ்ட்டு, அந்த நேரத்துல அவரோட மார்க்கெட் டல்லாயிடுச்சுன்னா அப்போ நம்ம படத்தோட பிசினஸ் ரொம்ப வீக்காயிடும். அதனால அவரை கழட்டி விட்டுட்டு பேசாம நீங்களே ஹீரோவா நடிச்சிருங்க…” என்று கொம்பு சீவி விட்டாராம்.

அப்புறம் என்ன ஜெய்யும் வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்து விட்டதால், இப்போது அந்தப்படத்தில் விஷால் தான் ஹீரோவாக நடிக்கப் போகிறாராம்.
Loading...
tamizilnews. Powered by Blogger.