Face Upward - Widget

வெஜிடபிள் தயிர் பச்சடி | Curd Vegetable Salad

Loading...

தேவையானப்பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

கேரட் - 1

கொத்துமல்லி இலை - சிறிது

பச்சைமிளகாய் - 2

உப்பு - ருசிக்கேற்றவாறு

தயிர் - ஒரு பெரிய கிண்ணம்

செய்முறை:

• வெள்ளரியின் தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

• கேரட்டின் தோலை சீவி விட்டு, வெள்ளரித்துண்டின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.

• தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகியவற்றை நீக்கி விட்டு மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.

• பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும்.

• கொத்துமல்லியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைந்த தயிரை ஒரு பாத்திரந்தில் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

• இப்போது வெஜிடபிள் தயிர் பச்சடி ரெடி.
Loading...
tamizilnews. Powered by Blogger.