Face Upward - Widget

பேசாம ‘ரெட் ஜெயன்ட்’ படங்களுக்கு வரிச்சலுகை கெடையாதுன்னு சட்டம் போட்டுடுங்க… : தமிழக அரசு மீது உதயநிதி பாய்ச்சல்!

Loading...
ரெட் ஜெயன்ட் தயாரிக்கிற எல்லா படத்துக்கு திட்டமிட்டு வரிவிலக்கு தர மறுக்கு தமிழக அரசின் மீது காட்டமாக பாய்ந்திருக்கிறார் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசியதாவது :

“என்னோட மனைவி டைரக்டராகியிருக்கிறதுல ரொம்ப சந்தோஷம் தான். ஆனா எதிர்பார்த்த அளவுக்கு ‘வணக்கம் சென்னை’ படத்துக்கு ஓப்பனிங் இல்ல. ஆனா டீசென்ட்டான ஓப்பனிங் இருக்கு.

விமர்சனங்கள் ரொம்ப பாசிட்டிவ்வா வந்திச்சு. ஒவ்வொரு ஷோவுக்கும் மக்கள் வர்றது அதிகமாகிட்டே இருக்கு. கண்டிப்பா லாபமா அமையும்னு நம்பறேன்.

ஏன்னா இது பெரிய பட்ஜெட் படம் கிடையாது. இந்த ஓப்பனிங் வந்ததுக்கு காரணமே அனிருத்தோட இசை, படத்தோட டிரெய்லருக்கு யூடியுபில் கிடைச்ச வரவேற்பும்தான்.

‘வணக்கம் சென்னை’ படம் யு சர்டிஃபிகேட் வாங்கியும் கூட அந்தப் படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை கொடுக்கல. அதுக்கான காரணம் ஊருக்கே தெரிஞ்ச காரணம் தான். பேசாம அவங்க ரெட் ஜெயன்ட் தயாரிக்கிற எந்த படத்துக்கும் வரிவிலக்கு கெடையாதுன்னு சட்டமே போடுடலாம்.

ஆனா நான் கண்டிப்பா கோர்ட்டுக்குப் போவேன். நிறைய ஆதாரங்களை எடுத்து வச்சிருக்கேன். மத்திய அரசு நடத்துற சென்சார் போர்டு அவ்வளவு சின்சியரா நடத்துறாங்க. ஒரு படத்துக்கு சம்பந்தமில்லாம பாக்குற முதல் ஆளுங்க அவங்கதான்.

அதுக்கு அவ்வளவு ரூல்ஸ் இருக்கு. 5 பேர் பாக்கணும். அதுல 2 லேடீஸ் இருக்கணும். படம் புரொஜக்‌ஷன் ரூம்ல கூட தயாரிப்பாளர், இயக்குனர் இருக்கக் கூடாது.

நான் கேட்குறது ஒரே விஷயம் தான். மத்த படங்களுக்கு வரிச்சலுகை கிடைக்குறது ஏன் என்னோட படங்களுக்கு கிடைக்கல?.

ஏன்னா என்னோட அரசியல் பின்னணி. எல்லாத்துக்கும் பொதுவா ஒரு சட்டம் போடுங்க. உடனே உங்க ஆட்சில நடக்கலயானு கேட்பாங்க.

என்னால ஒரு படம் வெளிவர முடியாமலோ, தள்ளிப் போச்சுன்னோ சொன்னாங்கன்னா நான் சினிமாவை விட்டே போகத் தயார். வரி விஷயத்தை பொறுத்த வரைக்கும் இதை நான் சும்மா விடப்போவதில்லை.

என்று எரிச்சலாகிறார் உதயநிதி.
Loading...
tamizilnews. Powered by Blogger.