Face Upward - Widget

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4200 கிராமங்கள் வெள்ளத்தில் | Flooded villages in 4200 due to the lower level low pressure

Loading...

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளதால் 16 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

விசாகப்பட்டினம், விஜயநகரம், மேற்கு கோதாவரி, ஸ்ரீகாகுளம், மெடக், கரிம்நகர், கம்மம், பிரகாசம் உள்பட 14 மாவட்டங்களில் விவசாய பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழிந்தது.

மேற்கு கோதாவரியில் 1150 வீடுகள் இடிந்து தரை மட்டமானது, 2½ லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிர்கள் மூழ்கியது.

இதே போன்று மெடக், கரிம்நகர், கம்மம் மாவட்டத்தில் நெல், பருத்தி, மிளகாய், மக்காச்சோளம் தண்ணீரில் மூழ்கி அழுகியது.

மழையால் மாநிலத்தில் ரூ.1727 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக வருவாய்துறை மந்திரி ரகுவீராரெட்டி அறிவித்துள்ளார்.

நேற்று வெள்ளம் பாதித்த நல்கொண்டா மாவட்டத்தை ஆய்வு செய்த பின் நிருபர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 521 மண்டலத்தில் 4200 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

22 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளது, 42 பேர் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணப் பணிக்காக ரூ.1600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விஜயநகரம் மற்றும் விஜயவாடா பகுதியில் பல்வேறு இடங்களில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால், கோரப்பள்ளி எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், புவனேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்பட 7 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Loading...
tamizilnews. Powered by Blogger.