Face Upward - Widget

படுக்கையில் 20,00,000 பணத்தை போட்டு அதன் மீது உறங்கிய பிரமுகர் | A leader Rs 20,00,000 in cash on the bed and slept over

Loading...


திரிபுரா மாநிலத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவர், 20 லட்சம் பணத்தின் மேல் படுத்து தூங்கியது ஒரு சேனலில் ஒளிபரப்பானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவர் சமர் ஆச்சார்ஜி. இவருக்கு வயது 42.


திரிபுரா தலைநகர் அகர்தாலாவில் மாநகராட்சி கட்டிட பணிகளை இவர் காண்டிராக்ட் அடிப்படையில் எடுத்து செய்து கொடுத்து வருகிறார். சமீபத்தில் அகர்தாலா மாநகராட்சிக்குட்பட்ட 3 வார்டுகளில் கழிவறை கட்டுவதற்கான ஒப்பந்தம் பெற்றார்.
இந்த நிலையில் பணக்கட்டுகளுடன் சமர் ஆச்சார்ஜி இருப்பது போன்ற வீடியோ படக்காட்சிகள் அங்குள்ள டிவி சேனலில் ஒளிபரப்பானது திரிபுராவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.


அந்த வீடியோ பட காட்சியில் ஒரு படுக்கையில் பணத்தை தூவி அதன் மீது சமர் ஆச்சார்ஜி படுத்து தூங்குவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.


இது பற்றி ஆச்சார்ஜி கூறுகையில், ‘‘பணம் மீது படுத்து தூங்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு. இதற்காக வங்கியில் இருந்து ரூ.20 லட்சம் எடுத்து வந்து படுக்கையில் பண நோட்டுக்களை தூவினேன்‘‘ என்றார்.


மேலும் அவர் கூறிய சில கருத்துக்கள் திரிபுரா மாநில கம்யூனிஸ்டு தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
tamizilnews. Powered by Blogger.