Face Upward - Widget

லண்டன் சர்வதேச திரைப்பட விழா - பரதேசிக்கு 2 விருதுகள்

Loading...


லண்டனில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பாலாவின் பரதேசிக்கு இரு விருதுகள் கிடைத்துள்ளன.


டேனியலின் ரெட் டீ நாவலை தழுவி பாலா பரதேசியை எடுத்திருந்தார். நாஞ்சில்நாடன் வசனம். பல விருதுகளை எதிர்பார்த்த இப்படம் தேசிய விருதில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை மட்டுமே வென்றது.


லண்டன் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர். சிறந்த படம் உள்பட 8 பி‌ரிவுகளில் ப‌‌ரிந்துரைக்கப்பட்டது. அதில் இரண்டு பி‌ரிவுகள் ப‌ரிசு வென்றுள்ளதாக திரைப்பட விழாவின் அதிகார ட்விட்டர் பக்கத்தில் தெ‌ரிவிக்கப்பட்டுள்ளது.


சிறந்த ஆடை வடிவமைப்புக்காக பூர்ணிமா ராமசாமியும், சிறந்த ஒளிப்பதிவுக்காக செழியனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Loading...
tamizilnews. Powered by Blogger.