Face Upward - Widget

10 மாதங்களுக்கு முன் இறந்த பெண் சடலத்துடன் வாழ்ந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை

Loading...


நாகர்கோவில்:நாகர்கோவிலில் 10 மாதங்களுக்கு முன்பு இறந்து போன பெண்ணின் சடலத்தை இன்று வீட்டிலேயே பிரேத பரிசோதனை செய்தனர். சடலத்துடன் 10 மாதமாக வசித்த அந்த பெண்ணின் தாய், சகோதரர் மற்றும் மகன் மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நாகர்கோவில் ராமவர்மா புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணிய பிள்ளை. ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியர். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி சரோஜினி (89). இவர்களுக்கு உமாதேவி (56) என்ற மகளும், பெருமாள், செல்வம் பிள்ளை (53) என்ற மகன்களும் உண்டு. உமாதேவியின் கணவர் தாணுப்பிள்ளை. குடும்ப தகராறு காரணமாக மகன் சிவராமனுடன், ராமவர்மா புரத்தில் உள்ள தாய் வீட்டில் உமாதேவி வசித்தார். பெருமாளும் திடீரென இறந்து போக, வீட்டில் சரோஜினி, செல்வம் பிள்ளை, உமாதேவி, அவரது மகன் சிவராமன் ஆகியோர் மட்டுமே வசித்து வந்தனர். 

இவர்கள் அக்கம் பக்கத்தில் யாருடனும் பேசுவதில்லை. வீடு எப்போதும் பூட்டியே கிடக்கும். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, உடல்நிலை சரியில்லாமல் உமாதேவி இறந்திருக்கிறார். ஆனால் அவரது உடலை வீட்டில் இருந்தவர்கள் துணியில் கட்டி ஒரு அறைக்குள் பூட்டிவிட்டனர். இறந்து போன சுப்பிரமணிய பிள்ளையின் பென்ஷன் பணம் மட்டுமே இவர்களின் குடும்ப வருமானமாக இருந்தது. 

சமீபத்தில் பென்ஷனுக்கான உயிர் வாழ் சான்றிதழை இவர்கள் சமர்ப்பிக்காததால், பென்ஷனும் நின்று போனது. இதனால் வீட்டுக்கு அருகே வசிக்கும் சாந்தி என்பவரிடம் பணம் கேட்டுள்ளனர். சாந்தியின் மகன் ரூ.500 கொடுத்துள்ளார். அந்த பணத்தில் ஓட்டலில் செல்வம் பிள்ளை சாப்பாடு வாங்கி வந்தார். அவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்த போது, பாத்திரத்தில் சாந்தி தண்ணீர் கொண்டு சென்றார். அப்போது வீட்டில் துர்நாற்றம் வந்ததை சாந்தி அறிந்து வெளியில் பதற்றத்துடன் வந்து விட்டார். இதுகுறித்து போலீசில் அவர் தகவல் அளித்தார்.

உடனே டவுன் டிஎஸ்பி உதயகுமார் தலைமையில் கோட்டாறு இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டில் சோதனை செய்தனர். அங்கு 10 மாதங்களுக்கு முன்பு இறந்து போன உமாதேவியின் சடலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் இருந்த 3 பேரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் இருந்ததால், உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

பின்னர் பிரேத பரிசோதனை நடத்த டாக்டர்களை அனுப்பி வைக்குமாறு, மருத்துவ கல்லூரி முதல்வரிடம் இன்று காலை கடிதம் அளித்தனர். அதன்படி டாக்டர்கள் வந்து பிரேத பரிசோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சடலம் இருந்தால் கருப்பு உருவம் வராது? 

வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் விவரம் கேட்ட போது யாரும் பேசவில்லை. நீண்ட நேரத்துக்கு பிறகு செல்வம் பிள்ளை மட்டும், எனது தந்தை ஏதோ உருவத்தை பார்த்து இறந்து போனார். எனது சகோதரர் பெருமாள், எனது சகோதரி உமாதேவியும் அந்த உருவத்தை பார்த்து இறந்து போனார்கள். நானும் அந்த உருவத்தை பார்த்தேன். ஆனால் சாகவில்லை. சடலம் இருந்தால் உருவம் வராது என்றார். மற்றப்படி அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. செல்வம் பிள்ளை பி.டெக் முடித்துள்ளார். ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்.

- See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=49428#sthash.nLiA0itR.dpuf
Loading...
tamizilnews. Powered by Blogger.