Face Upward - Widget

இந்திய அணியின் நம்பர்-1 இடத்துக்கு மீண்டும் ஆபத்து வருமா? | first place of the Indian team at risk to come back?

Loading...

கடந்த இரு போட்டிகள் மழையால் ரத்தானதால், இந்திய அணியின் "நம்பர்-1´ இடத்துக்கு இருந்த ஆபத்து நீங்கியது.

சர்வதேச ஒருநாள் தரவரிசையில், கடந்த 2012, ஜூலை முதல் இந்திய அணி முதலிடத்தில் (122) உள்ளது. தற்போதைய அவுஸ்திரேலிய தொடரை, 1-6 என்ற கணக்கில் இழக்கும் பட்சத்தில் "நம்பர்-1´ இடம் பறிபோகும் அபாயம் இருந்தது.

இதற்கேற்ப, முதல் 3 போட்டிகள் முடிவில், இந்திய அணி 1-2 என, பின் தங்கி இருந்தது. அடுத்த இரு போட்டிகள் மழையால் ரத்தானது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் தோற்று தொடரை 1-4 என, இழந்தாலும் இந்திய அணி 120 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கும். அவுஸ்திரேலியா 119புள்ளி பெறும். 

ஒருவேளை இந்திய அணி அடுத்த இரு போட்டிகளில் வெல்லும் பட்சத்தில், 123 புள்ளி கிடைக்கும். 2வது இடத்தில் அவுஸ்திரேலியா (114) நீடிக்கும். அடுத்த இரு இடத்தில் 3புள்ளிகள் குறைவாக (111) உள்ள இங்கிலாந்து, இலங்கை உள்ளன. 

பாக்., வாய்ப்பு: 4, 5 வது இடத்தில் தென் ஆப்ரிக்கா (105), பாகிஸ்தான் (102) உள்ளன. இன்று துவங்கும் இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடரை, பாகிஸ்தான் 3-2 என வென்றால், 5வது இடத்துக்கு (103) முன்னேறும். தென் ஆப்ரிக்கா (102) ஆறாவது இடத்துக்கு தள்ளப்படும்.

மாறாக, தென் ஆப்ரிக்கா 4-1 என கைப்பற்றினால், 107 புள்ளி கிடைக்கும். 5-0 என்று வென்றாலும், ஐந்தாவது இடத்தில் (110) மாற்றம் இருக்காது
Loading...
tamizilnews. Powered by Blogger.